Skip to main content

இன்வென்டரியில் புதிய பொருள் சேர்த்தல்

இந்த வழிகாட்டி, மெர்சண்ட் செயலி மூலம் இன்வென்டரியில் ஒரு புதிய பொருளை (Product) விலை மற்றும் GST அமைப்புகளுடன் எவ்வாறு சேர்ப்பது என்பதை விளக்குகிறது.


தொடங்குவதற்கு முன்

  • மெர்சண்ட் செயலியில் உள்நுழைந்திருக்க வேண்டும்
  • Inventory Module-க்கு Edit access கொண்ட ரோல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்

படி 1: இன்வென்டரி மாட்யூல் திறத்தல்

  1. மெயின் நேவிகேஷன் பாரில் Inventory தேர்வு செய்யவும்
  2. Base Menu டேப் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அதை தேர்வு செய்யவும்

படி 2: புதிய பொருள் சேர்க்க தொடங்குதல்

  1. Add Product Add Product பொத்தானைத் தேர்வு செய்யவும்
  2. New Product படிவம் திறக்கப்படும்

Inventory products list


படி 3: அடிப்படை பொருள் விவரங்கள்

Basic Details பகுதியில்:

  • பொருள் பெயர் – POS மற்றும் ரசீதில் காணப்படும் பெயர்
  • விளக்கம் (விருப்பத்தேர்வு) – சுருக்கமான விளக்கம்
  • கேடகரி – ஏற்கனவே உள்ள கேடகரியைத் தேர்வு செய்யவும்
    (எ.கா: Beverages, Main Course, Desserts)
    அல்லது Add Category Add Category மூலம் புதிய கேடகரி உருவாக்கவும்
note

பொருள் பெயர் தனித்துவமானதாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டும்.
அப்படியானால் மட்டுமே தேடல் மற்றும் அறிக்கைகள் சரியாக இயங்கும்.


படி 4: மொழிபெயர்ப்புகளை சேர்க்கவும் (விருப்பம்)

Product name பகுதியில்:

  • மொழிபெயர்ப்பை சேர்க்க + Add Alias பொத்தானை அழுத்தவும்.
  • பல மொழி மெனு தேவையெனில், பொருளின் பெயரை மற்ற மொழிகளில் சேர்க்கவும்.

Product Translation

படி 5: விலை மற்றும் GST அமைத்தல்

Pricing பகுதியில்:

  1. விலை (Price) உள்ளிடவும்
  2. (விருப்பத்தேர்வு) GST அமைப்பை தேர்வு செய்யவும்
    (GST உடன் / GST இன்றி)
    GST settings
  3. (விருப்பத்தேர்வு) Base Price அமைக்கலாம்
    (லாபம் மற்றும் மார்ஜின் கணக்கீட்டிற்காக)

படி 6: கவுண்டரை தேர்வு செய்யவும் (விருப்பம்)

  1. இந்த பொருள் சேரும் கவுண்டரை தேர்வு செய்யவும்.

Merchant App-ல் கவுண்டரை உருவாக்க, Add counter என்பதை பார்க்கவும்.

படி 7: பொருளை சேமித்தல்

  1. Add Item தேர்வு செய்து பொருளை சேமிக்கவும்
  2. சேமித்த பிறகு சரிபார்க்கவும்:
    • Products பட்டியலில் பொருள் சரியாக காணப்படுகிறதா
    • Account Sync செய்த பின் Staff App பில்லிங் திரையில் காணப்படுகிறதா

💡 குறிப்பு:
பொருள் உருவாக்கப்பட்ட பிறகு Staff App-ல் உடனடியாக தெரியவில்லை என்றால்,
ஒரு முறை Sync செய்யவும் அல்லது Logout செய்து மீண்டும் Login செய்யவும்.